தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
வீ்ட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று கூறி தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:-
சிக்பள்ளாப்பூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஹேமஸ்ரீ (வயது 29). இவரது செல்போனுக்கு கடந்த வாரம் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம். அதற்கான நீங்கள் முன்பணம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். அதை நம்பிய ஹேமஸ்ரீ, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.2.81 லட்சம் வரை செலுத்தி உள்ளார். ஆனால் பணம் செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும், வேலை எதுவும் அந்த நபர் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹேமஸ்ரீ, அந்த நபரை தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமஸ்ரீ, தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சிக்பள்ளாப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.