டாக்டரிடம் ரூ.4 லட்சம் மோசடி


டாக்டரிடம் ரூ.4 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மெஸ்காம் அதிகாரி போல பேசி டாக்டரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவமொக்கா:-

சிவமொக்கா டவுனை சேர்ந்த டாக்டர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், நீங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை. இரவு 11 மணிக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே மின்கட்டணம் செலுத்தி இருந்தால், கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து டாக்டர், கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து கூறினார். எதிர்முனையில் மெஸ்காம் அதிகாரி பேசுவதாகவும், நீங்கள் செலுத்திய மின்கட்டணம் பதிவாகவில்லை எனவும் கூறி உள்ளார். மேலும், வங்கி விவரங்களை கூறினால் மின் கட்டணம் செலுத்திய விவரங்களை சரி பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய டாக்டர், அந்த நபர் கேட்ட விவரங்களை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் 2 தவணைகளில் ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மெஸ்காம் அதிகாரி என கூறி மர்மநபர் ரூ.4 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவமொக்கா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story