தச்சு தொழிலாளி கொலையில் நண்பர் கைது


தச்சு தொழிலாளி கொலையில் நண்பர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தச்சு தொழிலாளி கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு மங்கனஹள்ளி அருகே வீரபத்ரேஷ்வரா நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 46), தச்சு தொழிலாளி. இவரை கடந்த 22-ந் தேதி இரவு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து மர்மநபரால் தினேஷ்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடிவந்தனர். இந்த நிலையில், ஞானபாரதி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் தினேஷ்குமாரை கொலை செய்ததாக, அவரது நண்பரும், மங்கனஹள்ளியை சேர்ந்த அருண் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது தினேஷ்குமாரிடம் அருண் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ரூ.50 ஆயிரம் வட்டி கொடுக்க வேண்டிய இருந்தது. வட்டி பணத்தை கொடுக்காததால் தினேஷ்குமார், அருண் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பணத்தை கொடு, இல்லையெனில் மனைவியை அடமானம் வைத்து பணத்தை கொடுக்கும்படி தினேஷ்குமார் கூறியதாக தெரிகிறது. தனது மனைவி பற்றி தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த அருண், தினேஷ்குமாரை அழைத்து கழுத்தை அறுத்து தீர்த்து கட்டியது தெரியவந்தது. இந்த கொலை நடந்த 24 மணிநேரத்தில் அருண் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story