பெங்களூரு புதிய ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் சேவை தொடக்கம்


பெங்களூரு புதிய ரெயில் நிலையத்தில் இருந்து   ரெயில் சேவை தொடக்கம்
x

பெங்களூருவில் ரூ.314 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முதல் ரெயில் சேவை தொடங்கியது. முதல் ரெயில் எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்றது.

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.314 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முதல் ரெயில் சேவை தொடங்கியது. முதல் ரெயில் எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்றது.

புதிய ரெயில் நிலையம்

பெங்களூரு கே.எஸ்.ஆர். பெங்களூரு (சிட்டி) ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கும், வடமாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில் நிலையத்திற்கு அதிக ரெயில்கள் வருவதால் சில நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்கள் தண்டவாள பிரச்சினை காரணமாக ரெயில் நிலையத்தின் வெளியே நீண்ட நேரம் நிற்க வைக்கப்படுகிறது.

இதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பழைய மெட்ராஸ் சாலையில் பையப்பனஹள்ளி பகுதியில் ரூ.314 கோடி செலவில் விசுவேஸ்வரய்யா என்ற பெயரில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. விமான நிலையத்தில் இருக்கும் வசதிகளை போன்று இந்த ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

எர்ணாகுளத்திற்கு புறப்பட்ட ரெயில்

இந்த நிலையில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முதல் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் சேவை தொடங்கியது. புதிய ரெயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு முதல் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் இந்த ரெயில் எர்ணாகுளத்திற்கு இயங்க உள்ளது.

இதுபோல வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் உம்சாபர் ரெயில் 10-ந் தேதி புதிய ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இதுபோல பெங்களூரு-பாட்னா வாராந்திர ரெயில் 12-ந் தேதி முதல் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து இயங்க உள்ளது. இந்த ரெயில் நிலையத்தை அதிகாரபூர்வமாக இன்னும் திறக்கவில்லை. பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வரும் போது தான் ரெயில் நிலையம் அதிகாரபூர்வமாக திறக்கப்படும் என்றும், தற்போது சம்பிரதாய முறைப்படி ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story