உப்பள்ளியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


உப்பள்ளியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

உப்பள்ளியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

உப்பள்ளி;


கர்நாடகத்தில் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் உப்பள்ளி-தார்வார் மாவட்ட பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பல்வேறு விநாயகர் சிலைகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் வைக்கப்பட்டது.

இந்த சிலைகள் அனைத்தையும் 11-வது நாள் தான் ஊர்வலமாக எடுத்து சென்று குளங்களில் கரைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அசம்பாதவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க விநாயகர் சதுர்த்தி முடிந்து 10-ம் நாளே சிலைகளை கரைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் பேரில் உப்பள்ளியில் தாஜ்பான்பேட்டை, கணேஷ் பேட்டை, சந்திரகளா, மராட்டாஹள்ளி மற்றும் துர்கத்பைல் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நேற்றுமுன்தினம் இரவு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இந்திரா காந்தி கண்ணாடி மாளிகை பூங்கா அருகே உள்ள மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட செயற்கை கிணற்றில் கரைத்தனர்.

இந்த ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பங்கள் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story