காதலிக்க மறுத்த சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞன்..!
காதலிக்க மறுத்த சிறுமி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் 15 வயது சிறுமியை 22 வயதான அரவிந்த் விஸ்வகர்மா என்ற இளைஞர் ஒருவர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இளைஞரின் கோரிக்கையை சிறுமி நிராகரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி, தனது உறவினர் ஒருவருடன் பயிற்சி நிறுவனத்தில் இருந்து நேற்று வீடுதிரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த், சிறுமியில் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினான்.
இதில் சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய அரவிந்தை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story