மின்சாரம் தாக்கி சிறுமி பலி


மின்சாரம் தாக்கி சிறுமி பலி
x

வீட்டின் மொட்டை மாடியில் விளையாடியபோது மின்சாரம் தாக்கி சிறுமி பலினாள்.

பெங்களூரு:-

பெலகாவி (மாவட்டம்) புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மச்கே கிராமத்தைச் சேர்ந்தவள் மதுரா மோரே(வயது 13). இவளது தந்தை கேசவ். இந்த சிறுமி அப்பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த சிறுமி வீட்டுக்கு மேல் மொட்டை மாடி உள்ளது. அவ்வழியாக உயர் மின்னழுத்த கம்பி ஒன்றும் செல்கிறது. இதுபற்றி மதுராவின் தந்தை ஹெஸ்காம் மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டார். மேலும் புகார் கடிதமும் கொடுத்தார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் சிறுமி மதுரா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக அவளது கை அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி சிறுமி மதுரா தூக்கி வீசப்பட்டாள். இதில் படுகாயம் அடைந்த சிறுமி மதுரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story