சிறுமி பாலியல் பலாத்காரம்; மேற்குவங்க வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சிறுமி பாலியல் பலாத்கார செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உடுப்பி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மங்களூரு;
பலாத்காரம்
உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமியின் வீட்டில் அருகில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராஜீவ் என்கிற சோட்டு (வயது 20) வசித்து வந்தார். இந்த நிலையில் சோட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நடந்தவற்றை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறுமியை, பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுப்பி புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.
ஆயுள் தண்டனை
அதன்பேரில் போலீசார் ராஜீவை கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உடுப்பி மாவட்ட விரைவு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சீனிவாச சுவர்ணா அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டதால், ராஜீவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.56 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.