கோவாவில் கோர்ட்டுக்குள் புகுந்து பணம் திருட்டு


கோவாவில் கோர்ட்டுக்குள் புகுந்து பணம் திருட்டு
x

பல்வேறு வழக்குகளில் ஆதாரமாக பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பணத்தை மர்ம நபர் ஒருவர் திருடி தப்பி சென்றார்.

பனாஜி,

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள போர்த்துகீசிய கால கட்டிடத்தில் 3 மாவட்ட கோர்ட்டுகள் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் சான்று அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தார். அங்கு பல்வேறு வழக்குகளில் ஆதாரமாக பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி தப்பி சென்றார்.

கோர்ட்டு காவலாளி முன்பக்க பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அந்த மர்ம நபர் பின்பக்கமாக வந்து பணத்தை திருடிச் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story