தெய்வபக்தி மூலம் கடவுளின் பலத்தை பெற முடியும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


தெய்வபக்தி மூலம் கடவுளின் பலத்தை பெற முடியும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தெய்வபக்தி மூலம் கடவுளின் பலத்தை பெற முடியும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.

பெங்களூரு:

பெங்களூரு கருடாச்சாரபாளையாவில் உள்ள மஞ்சநாத் சுவாமி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-

பெங்களூருவில் புதிதாக 110 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. அதனால் பெங்களூருவில் நகரம் மற்றும் கிராமங்கள் இரண்டும் கலந்துள்ளன. கோவில்கள், சமுதாய பவன்களை அமைக்க வேண்டியது அவசியமானது. இந்த பகுதி முதலில் கிராமமாக இருந்தது. இது தற்போது நகரின் மையப்பகுதியாக மாறியுள்ளது. மனிதர்களுக்கு தெய்வ பக்தி இருக்க வேண்டும். தெய்வ பக்தி மூலம் கடவுளின் பலத்தை நாம் பெற முடியும். பசவண்ணரை போன்ற ஞானிகள் உடலையே கோவிலாக மாற்றி கொண்டனர். கோவிலுக்கு வந்து வழிபடும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. நல்ல மனநிலை ஏற்பட தெய்பக்தி முக்கியம். மகாதேவபுராவில் உள்ள கருடாச்சாரபாளையாவில் தான் அதிகளவில் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதை பார்க்கும்போது, இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு கருடாச்சாரபாளையாவில் உள்ளதாக தோன்றுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story