பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 பேர் கைது


பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2022 12:30 AM IST (Updated: 30 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேவனஹள்ளி அருகே, பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு;

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா கண்ணமங்களா கேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் தனியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பெண்ணை மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடிவந்தனர். இந்த நிலையில் தேவனஹள்ளி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் பெண்களை மிரட்டி தங்கச்சங்கிலி பறித்து வந்ததாக அம்ருதஹள்ளியை சேர்ந்த முகமது சல்மான்(வயது 23), எலகங்காவை சேர்ந்த ஜிஷான்கான்(25) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 4 தங்கச்சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


Next Story