பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.46¾ லட்சம் தங்கம் சிக்கியது
மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.46¾ லட்சம் தங்கத்தை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் தங்கச்சங்கிலிகள் இருந்தது.
இதுகுறித்து பயணியிடம் விசாரித்த போது அவர் மும்பையில் இருந்து தங்கச்சங்கிலிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் அந்த பயணியிடம் இருந்து ரூ.46 லட்சத்து 74 ஆயிரத்து 332 மதிப்பிலான 898.91 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story