பெங்களூருவில் வீடுகளுக்கே நேரில் சென்று சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்திய கவர்னர் கெலாட்
பெங்களூருவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் ேதசிய சின்னம், பாராட்டு பத்திரம் ெகாடுத்து கவுரவித்தார்.
பெங்களூரு: பெங்களூருவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் ேதசிய சின்னம், பாராட்டு பத்திரம் ெகாடுத்து கவுரவித்தார்.
சுதந்திர போராட்ட தியாகிகள்
வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் மற்றும் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக கவா்னர் தாவர்சந்த் கெலாட் இன்று பெங்களூருவில் சுதந்திர போராட்ட தியாகிகள் 3 பேரின் வீட்டிற்கு நேரில் சென்று கவுரவம் செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகிகளான ஜே.பி.நகர் 4-வது ஸ்டேஜ் பகுதியில் வசிக்கும் நாராயணப்பா, பனசங்கரி 3-வது ஸ்டேஜ் பகுதியில் வசிக்கும் சங்கரநாராயண், மல்லேசுவரத்தில் வசிக்கும் நாகபூஷண் ராவ் ஆகியோரின் வீடுகளுக்கு கவர்னர் சென்று, அவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்தும், மைசூரு தலைப்பாகை அணிவித்தும் கவுரவப்படுத்தினார். மேலும் இந்திய தேசிய கொடி, நான்கு முக சிங்க இந்திய ேதசிய சின்னமும், பாராட்டு பத்திரமும் கொடுத்து கவுரவித்து இனிப்பு வழங்கினார். அதனை சுதந்திர போராட்ட தியாகிகள் இன்முகத்துடன் பெற்றுக்கொண்டனர்.
எப்போதும் போற்றுவோம்
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள், சுதந்திர போராட்டத்தில் தாங்கள் பங்கேற்றது குறித்து விளக்கி கூறினர்.
அதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட், "சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய கவுரவம் அளிப்பது எங்களின் கடமை. அதை நாங்கள் செய்கிறோம். உங்களின் சுயநலம் இல்லாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை நாங்கள் எப்போதும் போற்றுவோம். உங்களை போன்றோர் இல்லாமல் நாம் சுதந்திரம் பெற்று இருக்க முடியாது" என்றார்.இந்த சந்திப்பின்போது மாநில உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.