கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காஷ்மீர் பயணம்


கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காஷ்மீர் பயணம்
x

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு செல்கிறார்.

புதுடெல்லி,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் டெல்லி சென்ற நிலையில், அங்குள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்தில் தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு செல்கிறார். ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் கலாசார விழாவில் பங்குபெறும் கவர்னர் ஆர்.என்.ரவி, பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பிய உடன் சென்னைக்கு புறப்படுவார் என தெரிகிறது.


Next Story