தனியார் வாகனங்களின் சங்கங்களுடன் அரசு இன்று ஆலோசனை- ஆட்டோ, கார் ஓடாது


தனியார் வாகனங்களின் சங்கங்களுடன் அரசு இன்று ஆலோசனை- ஆட்டோ, கார் ஓடாது
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனியார் வாகனங்களின் சங்கங்களுடன் அரசு இன்று ஆலோசனை நடத்த இருப்பதால் இன்று ஆட்டோ, கார் ஓடாது என்று கூறப்படுகிறது.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பஸ்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை கண்டித்து வருகிற 27-ந் தேதி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆட்டோக்கள், தனியார் பஸ்கள், வாடகை கார்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர்.

இதையடுத்து, தனியார் வாகனங்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன் வந்துள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தனியார் வாகன சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது அவர்களது கோரிக்கைகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு போக்குவரத்து துறை முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story