வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தொழிலாளி கைது
தரிகெரே அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லிங்கதஹள்ளி கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வருவதாக லிங்கதஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அந்த பகுதியில் சந்தேகப்படும் படியான வீடுகளில் அதிரடியாக சோதனை செய்தனர். இதில் சோதனையில் தொழிலாளியான பரத் (வயது 43) என்பவர் தனது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் 10-க்கும் ேமற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்து 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வேறு யாரேனும் கஞ்சா செடிகளையோ அல்லது கஞ்சாவை விற்பனையோ செய்து வருகின்றனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.