குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் - தீவிர ஏற்பாட்டில் இந்திய தேர்தல் ஆணையம்


குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் - தீவிர ஏற்பாட்டில் இந்திய தேர்தல் ஆணையம்
x

இமாசல பிரதேச மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேச மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இமாச்சலப் பிரதேசத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்று உள்ளனர்.

அங்கு சென்ற தேர்தல் ஆணையர்கள் மாநில அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து, தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வார்கள். அதன்பிறகு அடுத்த வாரம் குஜராத் மாநிலத்திற்கு சென்று தேர்தல் தயார் நிலை பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் செல்வது வழக்கமான நடைமுறை ஆகும்.


Next Story