குஜராத்: 'டெப் எக்ஸ்போ 2022' என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்
காந்தி நகர்,
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார் . பிரதமர் மோடி இன்று காந்திநகரில் 'டெஃப் எக்ஸ்போ 2022' என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர், நிறைவு பெற்ற வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 15 ஆயிரத்து 670 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது
'டெப்' எக்ஸ்போவை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது ;
இது புதிய இந்தியாவின் பிரமாண்டமத்தைக் காட்டுகிறது, அதற்கான தீர்மானம் இதில் நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் பங்களிப்பு, இளைஞர் சக்தி, இளம் கனவுகள், இளம் தைரியம் மற்றும் இளைஞர்களின் திறன்கள் உள்ளன:
. இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் நாட்டிலேயே இதுபோன்ற முதல் பாதுகாப்பு கண்காட்சி இதுவாகும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே உள்ளன என தெரிவித்தார்.