குஜராத் மாநில சட்டசபை தேர்தல்; நாளை மறுநாள் மனுதாக்கல் தொடக்கம்


குஜராத் மாநில சட்டசபை தேர்தல்; நாளை மறுநாள் மனுதாக்கல் தொடக்கம்
x

டிசம்பர் 1-ந்தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (நவம்பர் 5-ந் தேதி) தொடங்குகிறது.

காந்திநகர்,

குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைவதால் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.

அதன்படி இமாச்சல பிரதேசத்தில் வரும் நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குஜராத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று தேர்தல் ஆணையம் குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந் தேதி 2-ம் கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (நவம்பர் 5-ந் தேதி) தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 10-ந் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story