மதுபோதையில் போலீஸ் சோதனைச்சாவடிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு - கான்ஸ்டபிள் விஷால் படுகாயம்


மதுபோதையில் போலீஸ் சோதனைச்சாவடிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு - கான்ஸ்டபிள் விஷால் படுகாயம்
x

மதுபோதையில் போலீஸ் சோதனைச்சாவடிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் காண்ட் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டிற்குள் நகட்யா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது.

இந்த போலீஸ் சோதனைச்சாவடிக்குள் நேற்று இரவு மதுபோதையில் நபர் ஒருவர் நுழைந்தார். உள்ளே நுழைந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு பணியில் இருந்த போலீஸ்காரரை சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் சர்மா படுகாயமடைந்தார். துப்பாக்கியால் சுட்ட நபர் பைக்கில் காத்திருந்த மற்றொரு நபரின் உதவியுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து படுகாயமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் விஷாலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story