தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை ; அக்காள், மாமாவிற்கு போலீஸ் வலைவீச்சு


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை ; அக்காள், மாமாவிற்கு போலீஸ் வலைவீச்சு
x

உப்பள்ளி அருகே, சொத்தை அபகரிக்க முயற்சித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா நத்தீஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் திப்பண்ணா (வயது 32). இவரது அக்காள் புஷ்பா. இவரது கணவர் எல்லப்பா. நந்தீஸ்வரன் நகரில் ஜெகதீசிற்கு சொந்தமான நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தை அபகரிக்க அக்காள் புஷ்பா மற்றும் மாமா எல்லப்பா ஆகியோர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது அக்காள் மற்றும் மாமா, ஜெகதீசிற்கு மன ரீதியாக தொல்லை கொடுத்தனர்.

இந்த நிலையில் ஜெகதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் நேரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நவநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சொத்து விவகாரத்தில் அக்காள், மாமா கொடுத்த தொல்லை தாங்காமல் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது அக்காள், மாமா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story