சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் - பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
74வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில்,
"குடியரசு தின வாழ்த்துகள். இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின விழா வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிது. இதையொட்டி மாநிலங்களில் அந்தந்த ஆளுநர் கொடியேற்ற, டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றிவைக்கிறார்.
Related Tags :
Next Story