அரியானாவில் வெள்ளத்தில் மூழ்கிய உள்துறை மந்திரியின் வீடு...!


அரியானாவில் வெள்ளத்தில் மூழ்கிய உள்துறை மந்திரியின் வீடு...!
x

அரியானா மாநிலத்தில் மழை வெள்ளம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தி,

வட மாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் மண்டி மாவட்டத்தில் உள்ள பஞ்ச வக்த்ரா கோவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

இந்தநிலையில் அரியானா மாநிலத்தில் மழை வெள்ளம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரியானா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அம்பாலாவில் உள்ள உள்துறை மந்திரி அனில் விஜின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது.


Next Story