அரியானா விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங் மீது பாலியல் வழக்குப்பதிவு
அரியானா விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர்,
அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையில் உள்ள அமைச்சரவையில் விளையாட்டுத்துறை மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங்.
இந்த நிலையில், விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங் மீது சண்டிகர் போலீசார் பாலியல் புகார் பதிவு செய்துள்ளனர். ஜூனியர் தடகள பயிற்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story