கால்வாயில் குளிக்க சென்ற போது தண்ணீரில் அடித்துசெல்லப்பட்ட நடிகை - பிணமாக மீட்பு


கால்வாயில் குளிக்க சென்ற போது தண்ணீரில் அடித்துசெல்லப்பட்ட நடிகை - பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 7 July 2022 3:24 AM IST (Updated: 7 July 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

கால்வாயில் குளிக்க சென்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நடிகை பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை திபென்ஷி திவான் (வயது 23). இவர் சில நாடகங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே, ரிவாரி மாவட்டத்தில் உள்ள தும்பஹரி என்ற தனது சொந்த கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று திவான் சென்றார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திவான் தனது குடும்ப உறவினர்களுடன் கிராமத்தில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றார்.

கால்வாயில் குளித்துகொண்டிருந்தபோது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் நிலைதடுமாறிய திவான் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற உறவினர்கள் முயற்சித்தபோதும் திவான் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புப்படையினர் பல மணி நேர தேடுதலுக்கு பின் நடிகை திவானை கால்வாயில் இருந்து பிணமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்வாயில் குளிக்க சென்ற நடிகை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு நடிகை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story