மாமியாரை கொன்ற வாலிபர் கைது


மாமியாரை கொன்ற   வாலிபர் கைது
x

மாமியாரை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவருக்கும் பெங்களூரு எச்.ஏ.எல். அருகே வசித்து வரும் பவ்யஸ்ரீ என்பவருக்கும் திருமணம் நடந்து இருந்தது. ஆனால் குடும்ப தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனது தாய் சவுபாக்யா வீட்டில் பவ்யஸ்ரீ வசித்து வந்தார். நாகராஜூடன் குடும்பம் நடத்த பவ்யஸ்ரீயை அனுப்பி வைக்க சவுபாக்யா மறுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 12-ந் தேதி சவுபாக்யாவை, நாகராஜ் சுத்தியலால் அடித்து கொலை செய்து இருந்தார். இதுகுறித்து எச்.எல்.ஏ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நாகராஜை இன்று எச்.எல்.ஏ. போலீசார் கைது செய்தனர்.



Next Story