மந்திரியின் உதவியாளர் என கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்
மந்திரியின் உதவியாளர் என கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக நில பதிவேடுகள் துறை கமிஷனராக பணியாற்றி வருபவர் முனீஷ் மவுத்கில். இவரிடம் ஆனந்த் என்பவர் டிரைவராக வேலை செய்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்த் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முனீஷ் மவுத்கில்லின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், மந்திரி கோபாலய்யாவின் உதவியாளர் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஆனந்த்தை பணி இடமாற்றம் செய்தது குறித்து கேட்டதுடன், முனீஷ் மவுத்கில்லுக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து முனீஷ் மவுத்கில் அளித்த புகாரின்பேரில் சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீனியாவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 60) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கோவிந்தராஜின் மருமகன் தான் ஆனந்த் என்பதும், ஆனந்த்தை பணி இடமாற்றம் செய்ததால் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.