'ஹிஜாப்' தடைக்கு எதிரான மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீடு:  சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

'ஹிஜாப்' தடைக்கு எதிரான மேல்முறையீடு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.

பெங்களூரு: உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முஸ்லிம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தனர்.

கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்துமாறு மனுதாரர்கள் கோரினர். அவர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடக்கிறது.


Next Story