கேரளாவில் தொடர் கனமழை - 8 பேர் பலி


கேரளாவில் தொடர் கனமழை - 8 பேர் பலி
x
தினத்தந்தி 6 July 2023 9:09 AM IST (Updated: 6 July 2023 9:57 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் 47 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, 178 குழந்தைகள் உட்பட 879 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பழசி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், அதிரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Related Tags :
Next Story