மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த மழை
இந்திய வானிலை மையம் ராய்காட், ரத்னகிரி மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்துள்ளது.
மும்பை,
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், நகரில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் இந்திய வானிலை மையம் ராய்காட், ரத்னகிரி மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்துள்ளது, மூன்று மாவட்டங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
அண்டை நகரான ராய்காட்டில் அதிக தீவிர மழையும் பெய்யும் என என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story