குஜராத்தில் தொடர் கனமழை: 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
கனமழை காரணமாக குஜராத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்,
குஜராத்தில் ஒருமாத காலமாக விட்டு விட்டு பெய்துவரும் தொடர் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சூரத், ஜூனாகத், கிர், பாவ்நகர், தபி, டாங், வல்சாத் மற்றும் நவ்சாரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை தேசிய நெடுஞ்சாலை, டாங் மற்றும் கட்ச் ஆகிய பகுதிகள் மூடப்படுவதாக குஜராத் போிடர் மேலாண்மை மந்திரி ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story