கனமழை எதிரொலி: மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
மும்பை,
மராட்டியத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மராட்டியத்தில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி, தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story