கர்நாடகாவில் கனமழை: மங்களூரு நகரில் இன்று விடுமுறை அறிவிப்பு
கர்நாடகாவின் மங்களூரு நகரில் பெய்து வரும் கனமழையால் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் பருவமழையை முன்னிட்டு மங்களூரு, தட்சிண கன்னடா உள்ளிட்ட பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளில் நீர் நிரம்பி வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எனினும், மங்களூரு நகரில் காலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் தெளிவற்ற வானிலையால், மெதுவாகவே பயணிக்கின்றன.
இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையாளர் கே.வி. ராஜேந்திரா இன்று கூறும்போது, கர்நாடகாவின் மங்களூரு நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், குழந்தைகளின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு மங்களூர நகரம் முழுவதற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story