மராட்டியத்தில் மிக கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


மராட்டியத்தில் மிக கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 July 2023 5:42 PM IST (Updated: 24 July 2023 7:25 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விதர்பா பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

புதுடெல்லி,

மராட்டியத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விதர்பா பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த நிலையில், மராட்டியத்தில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக கூறியதாவது: குஜராத்தின் சவுராஷ்ட்ரா - கட்ச் பகுதிகளிலும், மத்திய மராட்டியத்திலும் கோவாவிலும் கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும். கடலோர கர்நாடகாவிலும் தற்போது கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை குஜராத்தில் பரவலாக மழை குறைந்திருக்கிறது. எனவே, வெள்ள பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இயல்பு நிலை திரும்புவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மும்பை, கோவா, கடலோர கர்நாடகா ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையை நாங்கள் தவிர்த்துவிட்டோம். நாளையும், நாளை மறுநாளும் தெலங்கானாவில் மிக கனமழை பெய்யும் . டெல்லியை பொறுத்தவரை குறிப்பிடும்படியான மழை எச்சரிக்கை எதுவும் இல்லை. டெல்லியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றார்.


Next Story