முகரம் பண்டிகையை 5 நாட்களாக கொண்டாடும் இந்துக்கள்


முகரம் பண்டிகையை 5 நாட்களாக கொண்டாடும் இந்துக்கள்
x

முகரம் பண்டிகையை, இந்துக்கள் 5 நாட்களாக கொண்டாடுகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவுன்டட்டி தாலுகாவில் ஹெரிபிதனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குருபா மற்றும் வால்மீகி சமூகத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முஸ்லிம் சமூகத்தினர் கிடையாது என கூறப்படுகிறது. ஆனால் ஆண்டுதோறும் இந்த கிராமத்தில் 5 நாட்கள் முகரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த எல்லப்பா நாயக்கா பேசுகையில் கூறியதாவது:-

ஹெரிபிதனூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு 2 முஸ்லிம் சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்கள் மசூதி ஒன்றை கட்டி வழிபட்டு வந்தனர். அவர்களது இறப்பிற்கு பின்னர், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மசூதியில் வழிபாடு செய்து வருகின்றனர். அண்மையில் மசூதியை மேம்படுத்த தொகுதி எம்.எல்.ஏ. மகாந்தேஷ் கவுஜலகி ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கினார். ஆண்டுதோறும் இந்த மசூதியில் முகரம் பண்டிகையையொட்டி 5 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story