கப்பன் பார்க்கில் ஹாப்காம்ஸ் கட்டிடம் உள்ளதா?; தனிக்குழுவிடம், ஐகோர்ட்டு உத்தரவு


கப்பன் பார்க்கில் ஹாப்காம்ஸ் கட்டிடம் உள்ளதா?; தனிக்குழுவிடம், ஐகோர்ட்டு உத்தரவு
x

கப்பன்பார்க்கில் ஹாப்காம்ஸ் கட்டிடம் உள்ளதா? என்பது குறித்து வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி தனிக்குழுவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கப்பன்பார்க்கில் ஹாப்காம்ஸ் கட்டிடம் உள்ளதா? என்பது குறித்து வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி தனிக்குழுவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கப்பன்பார்க்கில் ஹாப்காம்ஸ் கட்டிடம்

பெங்களூரு மாநகராட்சி அருகே ஹட்சன் சர்க்கிளில் ஹாப்காம்ஸ் கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடம் கப்பன் பார்க் எல்லைக்குள் வருவதாகவும், சட்டவிரோதமாக கப்பன்பார்க் பகுதியில் ஹாப்காம்ஸ் கட்டப்பட்டு செயல்பட்டு வருவதாக கூறி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை கப்பன்பார்க்கில் நடைபயிற்சி மேற்கொள்ளும் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனுவில் கடந்த 1966-ம் ஆண்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்களை விற்பனை செய்வதற்காக 53 ஆயிரத்து 328 சதுர அடி நிலத்தை விவசாயத்துறைக்கு, 99 ஆண்டு குத்தகைக்கு அரசு வழங்கி இருந்தது. தற்போது அந்த நிலத்தில் அடுக்குமாடி கட்டிடத்தை அரசின் உத்தரவு மற்றும் கோர்ட்டு அனுமதி பெறாமல் கட்டி இருக்கின்றனர். எனவே அந்த கட்டிடத்தை ஹாப்காம்ஸ் பயன்படுத்த அனுமதி வழங்க கூடாது என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

8-ந் தேதி அறிக்கை தாக்கல்

இந்த பொதுநல மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வரலே முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அவர், ஹாப்காம்ஸ் கட்டிடம் கப்பன்பார்க்கில் உள்ளதா? என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்ள பொதுபணித்துறை சார்பில் வருகிற 4-ந் தேதிக்குள் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

அந்த குழுவினர் ஹாப்காம்ஸ் கட்டிடம் கப்பன்பார்க் பகுதியில் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து, வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.பி.வரலே உததரவு பிறப்பித்துள்ளார்.


Next Story