வீடு புகுந்து ரூ.7 லட்சம் தங்கநகைகள் திருட்டு்: மர்மநபர்களுக்கு வலைவீச்சு


வீடு புகுந்து ரூ.7 லட்சம் தங்கநகைகள் திருட்டு்:  மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x

வீடு புகுந்து ரூ.7 லட்சம் தங்கநகைகள் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்கமகளூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுன் வித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ரெட்டி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் யாரோ மர்மநபர்கள், ஜோதி ரெட்டி வீட்டின் பூட்டை கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள், பீரோவில் இருந்த 180 கிராம் தங்கநகைகளை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.7.20 லட்சம் இருக்கும்.

இதுபற்றி அறிந்து வந்த ஜோதி ரெட்டி, கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர். மோப்ப நாய், திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story