30 நிமிடங்களில் 30 உணவு வகைகளை சாப்பிட்டால் ரூ. 1 லட்சம் பரிசு - 'பாகுபலி' சவால் விடுத்த உணவகம்


30 நிமிடங்களில் 30 உணவு வகைகளை சாப்பிட்டால் ரூ. 1 லட்சம் பரிசு - பாகுபலி சவால் விடுத்த உணவகம்
x

Image Courtesy : ANI  

இந்த சவாலுக்கு 'பாகுபலி' சவால் என பெயரிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பிரியர்களுக்கு ஏற்ற வகையில் புதிய சவால் விடுக்கப்பட்டுள்ளது. 30 வகை உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசு என்ற சவால் தான் அது.

30 உணவு வகைகளை கொண்ட தொகுப்பை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் முதலில் ரூ. 1,800 செலுத்த வேண்டும். இந்த 30 வகைகளுள் பிரியாணி, ப்ரைடு ரைஸ் மற்றும் கூல் டிரிங்ஸ் போன்ற பல உணவுகள் உள்ளன. 'பாகுபலி' சவால் என பெயரிடப்பட்டுள்ள இந்த சவாலில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இருப்பினும் 2 நபர்கள் மட்டுமே இதில் வெற்றி பெற்று ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையை வென்றுள்ளதாக உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story