தெலுங்கானா: மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு - 25 மாணவிகள் மயக்கம்
ஐதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஆய்வகத்தில் இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வாயு கசிவு காரணமாக 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசாயனம் வாயு கசிவு தொடர்பாக தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ரசாயன வாயு கசிவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசாயன வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story