ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்க டெல்லி வந்தேன்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்க டெல்லி வந்தேன்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி வந்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

திரவுபதி முர்மு

ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் பா.ஜனதா மேலிடம் விடுத்த அழைப்பை ஏற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பகல் 1.20 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார். இந்த நிலையில் டெல்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் நேரில் இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நான் டெல்லி வந்துள்ளேன். மத்திய மந்திரிகள் யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி தலைவர்களை சந்திக்கும் எண்ணம் இல்லை.

புகார் வரவில்லை

கர்நாடகம் 2 ஆக பிரிக்கப்படும் என்று மந்திரி உமேஷ்கட்டி கூறியுள்ளார். அவர் இவ்வாறு முதல் முறையாக கூறவில்லை. கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த கருத்தை கூறி வருகிறார். இதுகுறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் கர்நாடகத்தை 2 ஆக பிரிப்பது அரசு மட்டத்தில் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை.பிரதமர் பெங்களூரு வருகையின்போது போடப்பட்ட தாா்சாலை தரமற்ற முறையில் இருப்பதாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு ஆதாரத்துடன் ஏதாவது புகார் வந்தால் அதுபற்றி விசாரிக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story