3 வருட காதல்....கசந்தது...15 நாட்களுக்கு ஒரு முறை தான்....காதலியின் சுயரூபத்தால் அதிர்ச்சி அடைந்த காதலன்...!
ஒருவர் காதலில் விழும்போது, ஆரம்பத்தில் காதலியை மானே...தேனே...மயிலே,,.என கூறிக்கொண்டு காதலிப்பார்கள்.
பெங்களூரு,
ஒருவர் காதலில் விழும்போது, ஆரம்பத்தில் காதலியை மானே...மயிலே,,தேனே என கூறிக்கொண்டு காதலிப்பார்கள். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகும் போது அவரை பற்றி மேலும் மேலும் கண்டுபிடிப்பார். இவற்றில் சில கண்டுபிடிப்புகள் இனிமையானதாக இருந்தாலும், மற்றவை மிகவும் தொந்தரவு தரக்கூடியாக அமைந்து விடுகிறது. ஆந்த வகையில் ஒரு நபர் தனது காதலை பற்றி பேச ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்ததுதான் நெட்டிசன்களிடையே வைரலாகியிருக்கிறது. அவர் தனது மூன்று வருட காதலியைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கண்டுபிடித்தார். என்ன தெரியுமா? அவருடைய காதலி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைதான் குளிப்பாளாம். "நான் அவளை நேசிக்கிறேன், ஆனால் நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என கூறியுள்ளார்.
அவள் அடிக்கடி குளிப்பதில்லை. அதிகபட்சமாக வாரத்துக்கு ஒரு முறைதான் குளிக்கிறார். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், அந்த பெண்ணை நெருங்கும் போது அவர் மீது கெட்ட வாடை வீசுவதை வைத்தே இதனை அறிந்ததாகவும், ஆரம்பத்தில் இதனை பெரிதும் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் எப்போதாவது அவர் மீது கெட்ட துர்நாற்றம் வரும். அது வழக்கமாக மனிதர்களுக்கு இருக்கக் கூடியது என பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதுதான் புரிகிறது. என்னை பார்க்க வரும் போது மட்டும்தான் அவர் குளித்துவிட்டு வருவார் என நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையை எப்படி கையாள்வது என தெரியவில்லை. இது குறித்து காதலியிடமும் எடுத்து கூறிவிட்டேன்.
ஆனால் அதுவும் சரிவரவில்லை. இதனால் அவர் மனமுடைந்து போனதோடு எங்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பே ஏற்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை கண்ட பிற ரெடிட் பயனர்கள், அந்த பெண்ணுக்கு சுகாதாரமாக இருக்கக் கூடிய பிரச்சினை இருக்கிறது. மனநல டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். மேலும் நான் ஒரு நாளைக்கு இருமுறை குளிக்கிறேன், இந்த அளவுக்கு அந்த பெண் சுகாதாரமில்லாமல் இருப்பாரா என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.