முதல் மந்திரி விவகாரம்: தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - ராகுலை சந்தித்த பின் சித்தராமையா பேட்டி
முதல் மந்திரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று ராகுலை சந்தித்த பின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதல் மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையாவிற்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் இன்று தனித்தனியே ராகுல் காந்தியை சித்தராமையாவும் டிகே சிவக்குமாரும் சந்தித்தனர்.
கர்நாடக முதல் மந்திரியாக சித்தாரமையாவை கட்சி மேலிடம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, முதல் மந்திரி விவகாரத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story