நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பேசமாட்டேன் - மம்தா பானர்ஜி


நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பேசமாட்டேன் - மம்தா பானர்ஜி
x

நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பேசமாட்டேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெற்கு பார்னாஸ் மாவட்டத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, எந்த மதத்தினராலும் வன்முறை உருவாக்கப்படுவதில்லை. ஆனால், குப்பைத்தொட்டியை போன்ற மனநிலையை கொண்ட சில அரசியல்வாதிகளால் வன்முறை உருவாக்கப்படுகிறது. நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பேசமாட்டேன்' என்றார்.


Next Story