ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேரின் பணி இடைநீக்கம் ரத்து


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேரின் பணி இடைநீக்கம் ரத்து
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி இடைநீக்கத்தை கர்நாடக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

2 அதிகாரிகள் பணி இடை நீக்கம்

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலுமே நிறுவனத்தின் தலைவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக அரசுக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த சீனிவாஸ் மற்றும் மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை கடந்த மாதம் (நவம்பர்) 26-ந் தேதி பணி இடைநீக்கம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ரத்து செய்து அரசு உத்தரவு

இந்த நிலையில், 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும், அவர்களுக்கு பணி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது சீனிவாஸ் உள்பட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி இடைநீக்கத்தை கர்நாடக அரசு ரத்து செய்து இருக்கிறது.மேலும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாஸ், ராஜீவ் காந்தி வீட்டுவசதி வாரியத்தின் இயக்குனராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மற்றொரு அதிகாரி, கர்நாடக மாநில கனிமவள வாரிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story