'இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது' என கருத்து--வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு
இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது என்று கூறி வாலிபர் மீது பெண் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
பெங்களூரு-
தாவணகெரேவில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு முகநூல்(பேஸ்புக்) மூலம் வாலிபர் ஒருவர் பழக்கமானார். பின்னர் 2 பேரும் நேரில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு அந்த பெண்ணிடம் இருந்து வாலிபர் விலக தொடங்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண் பெங்களூரு இந்திராநகர் போலீசில் புகார் அளித்தார். அப்போது வாலிபர் 6 ஆண்டுகளாக தன்னை பலாத்காரம் செய்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாக புகார் அளித்தார். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர், '6 ஆண்டுகளாக மனுதாரர், வாலிபருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பலாத்காரம் என்று கூறு முடியாது' என்றார். மேலும் இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.