விசாரணைக்கு ஆகராகவில்லை எனில் குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படும்


விசாரணைக்கு ஆகராகவில்லை எனில் குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படும்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு:-

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தின் ஆய்வகத்தில் கடந்த 11-ந் தேதி தீவிபத்து ஏற்பட்டது. அப்போது மாநகராட்சி என்ஜினீயர் உள்பட 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிபத்து குறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநகராட்சி அதிகாரி பிரகலாத் என்பவருக்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் மாநகராட்சி அதிகாரி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தீவிபத்து குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிக்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆனால் மாநகராட்சி அதிகாரி பிரகலாத், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு 2-வது முறை நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அவர் விசாரணைக்கு வரவில்லை என்றால், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரையும் சேர்க்க வேண்டி இருக்கும்' என கூறப்பட்டது.


Next Story