ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் - யோகி ஆதித்யநாத்
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டப்பேரவை பணிகளை கணினி மயமாக்குதலில் மூலம் காகிதமற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின்போது பேசிய யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகளின் கடினமான கேள்விகள் மக்களுக்கு மேலும் முக்கியமான பணிகளை அரசு செய்ய உதவுகின்றன. மக்களுக்காக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்' என்றார்.
Related Tags :
Next Story