வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மருந்துகள் சப்ளை- மருந்தாளுனருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு


வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மருந்துகள் சப்ளை-   மருந்தாளுனருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
x

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மருந்துகள் சப்ளை செய்த மருந்தாளுனருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூரு: கேரளாவை சேர்ந்தவர் உமர். இவர் மருந்தாளுனராக உள்ளார். இந்த நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மருந்து, மாத்திரைகளை பார்சல் மூலம் சப்ளை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தின் மூலம் மருந்துகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், 357 கிராம் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு உமர், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது கூறிய நீதிபதி, சட்டவிரோதமாக மருந்து, மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு விற்று வந்ததால், விசாரணை முடியும் வரை மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story