திருமணமான 2 மாதங்களில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை


திருமணமான 2 மாதங்களில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு-

திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கெடிலா கிராமத்தை சேர்ந்தவர் குமாரப்பா பூஜாரி. இவரது மகள் ஹர்ஷிதா (வயது 28). இவருக்கும் கெமுமின்ஜே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த ஹர்ஷிதா, கடந்த 23-ந்தேதி கெடிலா பகுதியில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹர்ஷிதாவின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். இதனால் ஹர்ஷிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

தற்கொலை

இந்த நிலையில், ெவளியே சென்றிருந்த ஹர்ஷிதாவின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டில் ஹர்ஷிதா மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஹர்ஷிதாவை மீட்டு உடனடியாக புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஹர்ஷிதாவை பரிசோதனை செய்தனர். ஏற்கனவே ஹர்ஷிதா இறந்துவிட்டதாகவும், அவர் விஷம் குடித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுபற்றி புத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, ஹர்ஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹர்ஷிதா விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஹர்ஷிதாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story