திருமணமான 4 மாதத்தில் மரத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


திருமணமான 4 மாதத்தில் மரத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x

உப்பள்ளி அருகே, திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினையால் பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உப்பள்ளி;

குடும்ப தகராறு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே நவ்லூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 22). இவருக்கும், சிரிநகரில் வசித்து வரும் கைலாஷ் லோகூர் (28) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணமானது முதல் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மஞ்சுளா சென்றுள்ளார். அங்கு சென்ற மஞ்சுளா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அவரது பெற்றோர் வித்யாகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், மஞ்சுளாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் முழுவிபரம் தெரியவில்லை. இதுகுறித்து மஞ்சுளாவின் கணவர் கைலாஷ் லோகூரிடமும், அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story